என் மலர்

  செய்திகள்

  மாத்திரைக்குள் கம்பி இருப்பதை படத்தில் காணலாம்.
  X
  மாத்திரைக்குள் கம்பி இருப்பதை படத்தில் காணலாம்.

  அரசு ஆஸ்பத்திரியில் வழங்கிய மாத்திரையில் கம்பி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏர்வாடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் வழங்கிய மாத்தியிரையில் கம்பி இருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  ராமநாதபுரம்:

  ஏர்வாடி அருகே உள்ள ஏராந்துறையைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி சக்தி (வயது 45). இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஏர்வாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறச் சென்றார்.

  டாக்டர்கள் இல்லாததால் செவிலியர்கள் சக்தியை பரிசோதித்து மாத்திரை வழங்கினர். வீட்டுக்கு வந்த அவர் மாத்திரையை உடைத்து சாப்பிட முயன்றார். மாத்திரையில் கம்பி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  மாத்திரையை உடைக்காமல் சக்தி அதனை உட்கொண்டிருந்தால் அவரது நிலைமை மோசமாயிருக்கும். மாத்திரையில் கம்பி இருந்தது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
  Next Story
  ×