என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
கனகசெட்டிகுளத்தில் காரில் கொண்டு சென்ற ரூ.30 லட்சம் மருந்துகள் பறிமுதல்
Byமாலை மலர்4 April 2019 11:58 AM GMT (Updated: 4 April 2019 11:58 AM GMT)
கனகசெட்டிகுளத்தில் நடந்த வாகன சோதனையில் காரில் கொண்டு சென்ற ரூ.30 லட்சம் மதிப்புள்ள ஆயுர்வேத மருந்துகள் சிக்கியது.
சேதராப்பட்டு:
புதுவை பாராளுமன்றம் மற்றும் தட்டாஞ்சாவடி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி நடக்கிறது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் புதுவை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். அது போல் போலீசாரும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
காலாப்பட்டு இன்ஸ்பெக்டர் வெற்றிவேல், சப்- இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் மற்றும் போலீசார் இன்று மதியம் 12 மணியளவில் கனகசெட்டிகுளத்தில் வாகன சோதனை நடத்தி கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து புதுவை நோக்கி கார் ஒன்று வேகமாக வந்தது. போலீசார் அதை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது காருக்குள் அட்டை பெட்டிகள் இருந்தன. அதனை போலீசார் திறந்து பார்த்தனர். உள்ளே ஆயுர்வேத மருந்து பாட்டில்கள், மாத்திரைகள் லேகியம் ஆகியவை இருந்தன.
இதனைத்தொடர்ந்து போலீசார் காரை ஓட்டி வந்த புதுவை லாஸ்பேட்டை திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஹரி (வயது 25) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இந்த மருந்து- மாத்திரைகளை விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த கீழ்குத்துப்பட்டு ஆயுர்வேத தொழிற்சாலையில் இருந்து புதுவைக்கு கொண்டு செல்வது தெரிய வந்தது. ஆனால், இந்த மருந்து- மாத்திரைகளை கொண்டு செல்ல எந்தவித ஆவணங்களும் இல்லை.
இதைத்தொடர்ந்து போலீசார் அனுமதி இல்லாமல் கொண்டு சென்ற ஆயுர்வேத மருந்துகளை பறிமுதல் செய்தனர்.
இவற்றின் மொத்த மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட ஆயுர்வேத மருந்துகளை புதுவை வணிகவரித்துறையிடம் ஒப்படைத்தனர். #tamilnews

Next Story
×