என் மலர்
செய்திகள்
X
கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் விலை சரிவு: காய்கறி விலை அதிகரிப்பு- பீன்ஸ் கிலோ ரூ. 100
Byமாலை மலர்17 March 2019 1:50 PM IST (Updated: 17 March 2019 1:50 PM IST)
கோயம்போடு மார்க்கெட்டுக்கு வெங்காயத்தின் வரவு அதிகரித்துள்ளதால், அதன் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் பச்சை காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் காய்கறிகள் வருகின்றன. தற்போது கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான லாரிகளில் வெங்காயம் வருகிறது. இதனால் கடந்த வாரம் கிலோ ரூ. 15-க்கு விற்ற பெரிய வெங்காயம் தற்போது 11 ரூபாயாக குறைந்து இருக்கிறது.
சின்ன வெங்காயமும் அதிக அளவில் வருகிறது. முன்பு ஒரு கிலோ ரூ. 35 வரை விற்கப்பட்ட சின்ன வெங்காயம், தற்போது கிலோ ரூ. 25 ஆக குறைந்து இருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட பீன்ஸ் தற்போது 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. தக்காளி, வெண்டைக்காய், பச்சை மிளகாய், அவரைக்காய் உள்ளிட்ட காய்கறிகளும் விலை உயர்ந்துள்ளன.
இதுகுறித்து கோயம்பேடு மொத்த வியாபாரி பெருமாள் ரெட்டி கூறியதாவது:-
கோடை சீசன் தொடங்கி உள்ளதால் ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வழக்கத்தை விட கூடுதலாக வெங்காயம் கோயம்பேடு சந்தைக்கு விற்பனைக்கு வருகின்றன. இதன் காரணமாக வெங்காயத்தின் விலை சரிந்து உள்ளது.
இதேபோல் தண்ணீர் இல்லாமல் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பச்சை காய்கறிகள் விளைச்சல் குறைந்து வரத்தும் குறைந்து உள்ளது. இதன் காரணமாக பச்சை காய்கறிகள் விலை அதிகரித்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
×
X