search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு முழுவதும் தனியார் விளம்பர பலகைகளை அகற்றக்கூடாது - கோர்ட்டு இடைக்கால தடை
    X

    தமிழ்நாடு முழுவதும் தனியார் விளம்பர பலகைகளை அகற்றக்கூடாது - கோர்ட்டு இடைக்கால தடை

    தமிழ்நாடு முழுவதும் தனியார் விளம்பர பலகைகளை அகற்றக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. #HCMaduraiBench

    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் விளம்பர பலகைகள் வைக்க அரசு கட்டுப்பாடு விதித்திருந்தது. அதில் தனியார் விளம்பர பலகைகளுக்கு அனுமதி இல்லை என்றும் அரசு மற்றும் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளுக்கு சொந்தமான இடங்களில் வைப்பதுதான் விளம்பர பலகை என்றும் அந்த சட்ட திருத்தத்தில் கூறப்பட்டிருந்தது.

    இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விளம்பர பலகை உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு சட்ட திருத்தத்துக்கு கடந்த 30.8.18 அன்று இடைக்கால தடை விதித்தனர்.

    கடந்த 10.12.18 அன்று வழக்கு விசாரணை நீதிபதிகள் சுப்பையா, மற்றும் புகழேந்தி அமர்வில் வந்தது.

    இந்த விசாரணையின் போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், சிறப்பு அரசு பிளீடர் சண்முகநாதன் ஆகியோர் அரசு தரப்பிலும், மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான், தாளமுத்தரசு, ஆர்த்தி ஆகியோர் தனியார் விளம்பர பலகை உரிமையளார்கள் சார்பாக ஆஜரானார்கள்.

    இரு தரப்பு வாதங்களை கேட்ட பிறகு நீதிபதிகள், தனியார் விளம்பர பலகை உரிமம் பெற விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப் பங்களை நிராகரிக்க கூடாது என்றும், இந்த வழக்கு முடியும்வரை தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் விளம்பர பலகைகள் மீது எந்தவித நடவடிக்கைகளும் எடுக்க கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். #HCMaduraiBench

    Next Story
    ×