search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல் - டீசல் விலை இன்றும் உயர்வு
    X

    பெட்ரோல் - டீசல் விலை இன்றும் உயர்வு

    இன்று பெட்ரோல் லிட்டருக்கு 36 காசுகளும், டீசல் 25 காசுகளும் அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.85க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.77.74-க்கும் விற்கப்படுகிறது. #PetrolDiesel #PetrolDieselPriceHike
    சென்னை:

    பெட்ரோல்- டீசல் விலை சர்வதேச மார்க்கெட்டுக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அவற்றின் விலை தினமும் உயர்ந்து வருகிறது.

    நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகளும், டீசல் விலை 24 காசுகளும் உயர்ந்தது. இதன் காரணமாக சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.49 ஆகவும், டீசல் ரூ.77.49 ஆகவும் விற்கப்பட்டது.



    இன்றும் பெட்ரோல் லிட்டருக்கு 36 காசுகளும், டீசல் 25 காசுகளும் அதிகரித்தது சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.85க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.77.74-க்கும் விற்கப்படுகிறது.

    இந்த வாரத்தில் மட்டும் பெட்ரோல் - டீசல் விலை ரூ.3 வரை அதிகரித்துள்ளது.  #PetrolDiesel #PetrolDieselPriceHike

    Next Story
    ×