search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விடைபெறுகிறேன் உடன்பிறப்பே - ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலி நிறைவு
    X

    விடைபெறுகிறேன் உடன்பிறப்பே - ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலி நிறைவு

    திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில் ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவது நிறைவடைந்துள்ளது. #RIPKarunanidhi #Marina4Karunanidhi #KarunanidhiFuneral
    சென்னை :

    திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணியளவில் நடைபெறுகிறது. கருணாநிதியின் உடலை ஊர்வலமாக கொண்டுசெல்வதற்காக அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனம் ராஜாஜி அரங்கத்திற்கு கொண்டுவரப்பட்டது.

    கருணாநிதியின் உடல் அண்ணா சாலை, சிவானந்தா சாலை, வாலாஜா சாலை வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மெரினாவில் அண்ணா சமாதிக்கு பின்புறத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

    கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி ஹாலில் அஞ்சலி செலுத்துவதற்காக லட்சக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டு கூட்டம் அதிகரித்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில இடங்களில் நெரிசலும் ஏற்பட்டது. சிலர் படிக்கட்டு வழியாக ஏறி, கருணாநிதி உடலைப் பார்க்க முயன்றதால் ஒரு கட்டத்தில் போலீஸ் லேசான  தடியடியும் நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமானது.

    இதைத்தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் உடனடியாக தொண்டர்களிடையே மைக்கில் பேசினார். கருணாநிதியின் மறைவு, அவரை நல்லடக்கம் செய்வதற்கு ஏற்பட்ட தடைகள் குறித்து உணர்ச்சிப்பூர்வமாக பேசிய அவர், கலவரம் ஏற்பட இடம் தராமல் அமைதியாக கலைந்துசெல்லும்படி தொண்டர்களிடம் கூறியதை தொண்டர்ந்து அங்கு மக்கள் கூட்டம் குறைய தொடங்கியுள்ளது.

    இதனால், திமுக தலைவர் கருணாநிதிக்கு ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவது நிறைவடைந்துள்ளது. கருணாநிதியின் இறுதி ஊர்வலம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #RIPKarunanidhi #Marina4Karunanidhi #KarunanidhiFuneral
    Next Story
    ×