search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மபுரி மாவட்டத்தில் புதியதாக 127 3ஜி செல்கோபுரங்கள் அமைக்கப்படும்: அதிகாரி தகவல்
    X

    தர்மபுரி மாவட்டத்தில் புதியதாக 127 3ஜி செல்கோபுரங்கள் அமைக்கப்படும்: அதிகாரி தகவல்

    தர்மபுரி மாவட்டத்தில் புதியதாக 127 3ஜி செல்கோபுரங்கள் அமைக்கப்படும் என்று தொலை தொடர்பு துறை பொது மேலாளர் வெங்கட்ராமன் கூறினார்.
    தர்மபுரி:

    தர்மபுரியில் தொலை தொடர்பு துறை பொது மேலாளர் வெங்கட்ராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    2016-17 ம் ஆண்டு தணிக்கை நிறைவடைந்தது. தர்மபுரி மாவட்டத்தில் ரூ.1 கோடியே 45 லட்சம் லாபம் ஈட்டியுள்ளது. இது மகிழ்ச்சியளிக்கிறது. 2015-16 ம் ஆண்டில் 5 கோடி நஷ்டம் ஏற்பட்டது தற்போது லாபத்தை ஈட்டியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் 425 செல்கோபுரங்கள் உள்ளன. இதில் 313, 2ஜி செல்கோபுரங்களும்,112,3ஜி செல்கோபுரங்களும் தற்போது உள்ளன. கிராமப்புறங்களில் சேவையை மேம்படுத்தும் வகையில் 127 புதிய 3ஜி செல் கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன.

    தர்மபுரி மாவட்டத்தில் 6 லட்சம் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதில் 60 ஆயிரம் வாடிக்கையாளர் மட்டும் மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைத்துள்ளனர். எனவே வாடிக்கையாளர்கள் பிப்ரவரி 9 ந் தேதிக்கு முன் அலுவலகத்தை தொடர்பு கொண்டு ஆதார் எண்ணை பதிவுசெய்து தொடர்ந்து சேவையை பெற்றுகொள்ளவும்.

    பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டங்கள் வழங்குவதிலும் சலுகைகள் வழங்குவதிலும் முன்னிலை வகிக்கிறது. தற்போது லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் துறைகளில் புதிய திட்டங்களையும் சலுகைகளையும் அறிமுகப்படுத்தி உள்ளது.

    மொபைல் திட்டங்களில் ரேட்கட்டர், தசரா ஆபர் என பல்வேறு சலுகைகள் அறிமுகப்படுத்தி உள்ளன. இதனை வாடிக்கையாளர் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    Next Story
    ×