search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தர்மபுரி மாவட்டம்"

    தர்மபுரி மாவட்ட ஓட்டல்களில் நாளை வாக்களித்து விட்டு ஓட்டல்களுக்கு செல்பவர்கள் வாக்களித்த கைவிரல் மையை காண்பித்தால் 10 சதவீத தள்ளுபடி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
    தர்மபுரி:

    தர்மபுரி பாராளுமன்ற தேர்தல் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது.

    இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிசெய்ய தர்மபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆலோசனைப்படி தர்மபுரி மாவட்ட ஓட்டல்களில் நாளை வாக்களித்து விட்டு ஓட்டல்களுக்கு செல்பவர்கள் வாக்களித்த கைவிரல் மையை காண்பித்தால் சாப்பிட்ட உணவுக்கான கட்டணதொகை மற்றும் பார்சல் கட்டணதொகையில் 10 சதவீத தள்ளுபடி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    பொதுமக்கள் மத்தியில் வாக்குப்பதிவின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த முயற்சியை மேற்கொள்வதாக தர்மபுரி மாவட்ட ஓட்டல் சங்க நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
    தர்மபுரி மாவட்டத்தில் 7 இடங்களில் மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டத்தில் 7 இடங்களில் ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டனர். நல்லம்பள்ளி, அரூர், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம் மற்றும் தருமபுரி தாலுகா அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

    தர்மபுரி தாலுகா அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட 500 பேரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். இதே போன்று நல்லம்பள்ளி தாலுகா அலுவலகம் முன்பு 250 பேரை போலீசார் கைது செய்தனர். இதே போல் மற்ற இடங்களிலும், மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

    தர்மபுரி மாவட்டத்தில் 7 இடங்களில் மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர் என்று ஜாக்டோ, ஜியோ நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். #tamilnews
    தீபாவளி பண்டிகை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர் 2008-ம் ஆண்டின் வெடிபொருட்கள் விதிகளின்படி விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் மாதம் 6-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர் 2008-ம் ஆண்டின் வெடிபொருட்கள் விதிகளின்படி விண்ணப்பிக்க வேண்டும். பட்டாசு கடை வைக்கும் கட்டிடம் கல் மற்றும் தார்சு கட்டிடமாக இருக்க வேண்டும். கடையின் இருபுறமும் வழிகள் அமைக்க வேண்டும்.

    மின்சார விளக்குகளை மட்டும் கடையில் பயன்படுத்த வேண்டும். தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை மற்றும் காவல் துறையிடமிருந்து தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து வரி செலுத்திய ரசீது மற்றும் கட்டிட வரைபடத்தின்-2 பிரதிகளை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். வாடகை கட்டிடமாக இருந்தால் நோட்டரி வக்கீலிடம் கையொப்பத்துடன் கூடிய அசல் வாடகை ஒப்பந்த பத்திரம் மற்றும் உரிம கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். அதற்கான அசல் சலானுடன் 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை இணைத்து படிவம் 5-ல் மாவட்ட வருவாய் அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வருகிற 30-ந்தேதி கடைசி நாளாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    தர்மபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்ததுறை சார்ந்த அலுவலகங்களில் பணிகள் முடங்கின. அலுவலகங்களும் வெறிச்சோடின.

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் வேலைநிறுத்தப்போராட்டம் தொடங்கியது. ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு பதிவறை எழுத்தருக்கு இணையான ஊதிய மாற்றம் வழங்க வேண்டும். அதற்கான அரசாணையை உடனடியாக தமிழகஅரசு வெளியிட வேண்டும். ஊரகவளர்ச்சித்துறையில் உள்ள ஏராளமான காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    தர்மபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முதல் அலுவலக உதவியாளர்கள் வரை பல்வேறு நிலைகளில் பணிபுரியும் அலுவலர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் உயரதிகாரிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்த வேலைநிறுத்த போராட்டம் நேற்று 2-வது நாளாக தொடர்ந்து நடந்தது. போராட்டத்தையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சி அலுவலகங்கள், 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் ஊரகவளர்ச்சி துறை சார்ந்த பல்வேறு அலுவலகங்களில் பணிபுரியும் பெரும்பாலான அலுவலர்கள், ஊழியர்கள் நேற்று பணியை புறக்கணித்தனர். இதனால் மேற்கண்ட அலுவலகங்கள் நேற்று அலுவலர்களின்றி வெறிச்சோடின. பெரும்பாலான ஊரக வளர்ச்சித்துறை சார்ந்த அலுவலகங்கள் நேற்று மூடப்பட்டிருந்தன. இந்த அலுவலகங்களில் வழக்கமான பணிகள் முடங்கின. இந்த அலுவலகங்களுக்கு பல்வேறு பணிகள் மற்றும் சான்றிதழ்கள் பெறுவதற்காக வந்த பொதுமக்கள், அலுவலகங்கள் மூடப்பட்டிருந்ததால் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நடந்து வரும் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தால் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிகள் முற்றிலும் முடங்கியது. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலர்கள் யாரும் இல்லாமல் அலுவலகம் வெறிச்சோடி கிடந்தது. பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். 
    ×