என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
இரணியலில் கடிதம் எழுதி வைத்துவிட்டு பட்டதாரி பெண் மாயம்
இரணியல்:
நாகர்கோவில் அருகே சுங்கான்கடை களியங்காடு விவேகானந்தா நகரை சேர்ந்தவர் சாம்ராஜ் (வயது 45). இவரது மகள் மெரினா சாம்லின் (22). பி.எஸ்.சி. பட்டதாரி.
இவர் கடந்த 17-ந்தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். அப்போது கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு மாயமாகி இருந்தார். அதில் மன நிம்மதி இல்லாமல் தவிப்பதாகவும் மன நிம்மதி தேடி செல்வதாகவும் கூறியிருந்தார்.
இந்த கடிதத்தை பார்த்த அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மெரினா சாம்லினை பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனால் அவர் கிடைக்க வில்லை. இதையடுத்து இரணியல் போலீசில் சாம்ராஜ் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இதுதொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மெரினாசாம்லினை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் காதலித்து வந்தது தெரிய வந்தது. தற்பொழுது அந்த வாலிபரும் மாயமாகி உள்ளார்.
எனவே மெரினா சாம்லினை அந்த வாலிபர் அழைத்துச் சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.