search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே குடிமகன்களின் கூடாரமான கல்லூரி பஸ் நிறுத்தம்
    X

    திண்டுக்கல் அருகே குடிமகன்களின் கூடாரமான கல்லூரி பஸ் நிறுத்தம்

    திண்டுக்கல் அருகே கல்லூரி மாணவ-மாணவிகள் வந்து செல்லும் பஸ்நிறுத்தம் குடிமகன்களின் கூடாரமாக மாறி வருகிறது.
    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் - கரூர் ரோட்டில் ஜி.டி.என். கல்லூரி முன்பு பஸ் ஸ்டாப் உள்ளது. தற்போது கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சிலரே பஸ் ஸ்டாப்பில் வந்து பஸ் ஏறிச் செல்கின்றனர். சமீப காலமாக இந்த பஸ் ஸ்டாப் குடிமகன்களின் புகலிடமாக மாறியுள்ளது.

    பயணிகள் அமரும் இடத்தில் மது பாட்டில்களும், பிளாஸ்டிக் டம்ளர், அவர்கள் சாப்பிட்ட மிச்சர், ஊறுகாய் பாக்கெட்டுகள் ஆகியவையே சிதறி கிடக்கின்றன. இது மட்டுமின்றி அழுக்கு ஆடைகளும் உள்ளது. ஆடுகள் மற்றும் மாடுகள் வெயிலுக்கு ஒதுங்கி இளைப்பாறி செல்கின்றன. ஆனால் மக்கள் இந்த பஸ் ஸ்டாப்பில் நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் மாலை நேரத்தில் குடிமகன்கள் மது பாட்டில்களை வாங்கி வைத்து பஸ் ஸ்டாப்பில் குடித்து வருவதாகவும் அதன் பிறகு போதை தலைக்கேறிய பின் அதே இடத்தில் தூங்கி விட்டு பின்னர் சென்று விடுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    பயணிகளுக்காக அமைக்கப்பட்ட பஸ் ஸ்டாப் தற்போது அவர்களுக்கும் பயனில்லாமல் உள்ளது. குறிப்பாக கல்லூரி மாணவ-மாணவிகள் வந்து செல்லும் இந்த இடத்தில் அசாதாரண நிலை நிலவி வருவதால் அதனை போக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    Next Story
    ×