search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 18 பேர் விடுதலை
    X

    இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 18 பேர் விடுதலை

    இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 18 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்று மதியம் இந்திய கடலோரக் காவல்படையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
    ராமேஸ்வரம்:

    ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்களை, எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது. பின்னர் மாநில அரசு, இது சம்பந்தமாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வலியுறுத்துவது,  அதற்கு பிறகு மத்திய அரசின் நடவடிக்கையால் மீனவர்கள் விடுவிக்கப்படுதும் தொடர்கிறது.

    இந்நிலையில், இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 18 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்று மதியம் 12 மணியளவில் இந்திய கடலோரக் காவல்படையினரிடம்  ஒப்படைக்கப்பட உள்ளனர். பின்னர் அங்கிருந்து மீனவர்கள் காரைக்காலுக்கு பிற்பகல் 4 மணியளவில் கொண்டு செல்லப்பட உள்ளனர். 

    கடந்த மாதம் 21 மற்றும் 26-ம் தேதிகளில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 38 மீனவர்களில் 18 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள மீனவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    முன்னதாக கடந்த மார்ச் 21-ம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 10 தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.  அன்றே நாகப்பட்டினம் மற்றும் ராமேஸ்வரத்தை செர்ந்த 16 மீனவர்கள் இரண்டு இடங்களில் கைது செய்யப்பட்டனர்.

    மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த மார்ச் 26-ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
    Next Story
    ×