என் மலர்

  செய்திகள்

  திருச்செங்கோட்டில் மரத்தடியில் பிணமாக கிடந்த மூதாட்டி: யார் அவர்? போலீசார் விசாரணை
  X

  திருச்செங்கோட்டில் மரத்தடியில் பிணமாக கிடந்த மூதாட்டி: யார் அவர்? போலீசார் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்செங்கோடு டவுன் நெசவாளர் காலனி முனியப்பன் கோவில் அரசமரத்தடியில் உள்ள மேடையில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தார்.
  திருச்செங்கோடு:

  திருச்செங்கோடு டவுன் நெசவாளர் காலனி முனியப்பன் கோவில் அரசமரத்தடியில் உள்ள மேடையில் நேற்று காலை 11 மணியளவில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தார்.

  இதுகுறித்து திருச்செங்கோடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும் சம்பவம் குறித்து விசாரித்தபோது, அந்த பகுதியில் உள்ள நகராட்சி மகப்பேறு நிலையத்துக்கு அந்த மூதாட்டி கைத்தடியுடன் சிகிச்சைக்கு வந்ததும், பின்னர் சோர்வாக நடந்துவந்து மரத்தடி மேடையில் படுத்ததும் தெரியவந்தது. அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×