என் மலர்

  செய்திகள்

  ஆரணியில் மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிப்பு
  X

  ஆரணியில் மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நூதன முறையில் மூதாட்டியின் தாலி சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்று விட்டனர்.பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  ஆரணி:

  ஆரணிப்பாளையம் தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் ஜினேந்திரதாஸ். இவர், வீட்டின் முன்பு பெட்டிக்கடை வைத்துள்ளார். நேற்று பகலில் ஜினேந்திரதாஸ் மனைவி அம்சா (வயது 70) கடையில் இருந்தார். அப்போது 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

  அவர்களில் ஒருவர் இறங்கி சென்று பொருள் வாங்குவது போல பேச்சு கொடுத்தார். பின்னர் அவர், திடீரென்று அம்சா கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு, அம்சாவை கீழே தள்ளிவிட்டு மோட்டார் சைக்கிளில் தயாராக நின்றவருடன் தப்பி சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அம்சா கூச்சலிட்டார். உடனே பொதுமக்கள் அங்கு திரண்டனர். ஆனால் மர்ம நபர்கள் தப்பி சென்றுவிட்டனர். 

  இதுகுறித்து ஆரணி நகர போலீசில் அம்சா புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

  மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
  Next Story
  ×