என் மலர்

  செய்திகள்

  பெரியகுளம் அருகே தனியார் நிறுவனத்தில் புகுந்து கொள்ளை
  X

  பெரியகுளம் அருகே தனியார் நிறுவனத்தில் புகுந்து கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெரியகுளம் அருகே தனியார் நிறுவனத்துக்குள் புகுந்த மர்ம நபர்கள் பணம் மற்றும் ஆவணங்களை திருடிச் சென்றனர்.

  தேனி:

  பெரியகுளம் தெற்கு ரத வீதியில் ஸ்ரீகாந்தன் (வயது 43) என்பவருக்கு சொந்தமான தனியார் நிறுவனம் உள்ளது. சம்பவத்தன்று தனது அலுவலகத்தை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது அலுவலகத்தில் இருந்த 2 மோட்டார் சைக்கிள்களின் ஆர்.சி. புக்குகள், ரூ.7 ஆயிரம் ரொக்கப்பணம், 2 கார் பேட்டரிகள் ஆகியவை திருடு போனது. இதன் மதிப்பு ரூ.14 ஆயிரம் ஆகும்.

  இது குறித்து ஸ்ரீகாந்தன் தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

  Next Story
  ×