என் மலர்

  செய்திகள்

  கூடங்குளம் அருகே தேசியகொடியை அவமதித்த கூலித்தொழிலாளி கைது
  X

  கூடங்குளம் அருகே தேசியகொடியை அவமதித்த கூலித்தொழிலாளி கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கூடங்குளம் அருகே குடி போதையில் தேசியகொடியை அவமதித்த கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
  நெல்லை:

  கூடங்குளம் அருகே உள்ள செட்டிக்குளம் பஞ்சாயத்து அலுவலகத்தில் நேற்று குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் ஊராட்சி செயலர் இந்திரா தேசியகொடி ஏற்றிவைத்தார். பின்னர் அனைவரும் விழா முடிந்து சென்று விட்டனர்.

  இந்தநிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முருகன் என்பவர் அங்கு வந்தார். குடிபோதையில் இருந்த அவர் திடீரென்று தேசியகொடி ஏற்றப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை சாய்த்து தேசியகொடியை அவமதிப்பு செய்ததாக தெரிய வருகிறது. இதுபற்றி ஊராட்சி செயலர் இந்திரா கூடங்குளம் போலீசில் புகார் செய்தார்.

  போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.
  Next Story
  ×