search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை-தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் தினவிழிப்புணர்வு பேரணி
    X

    நெல்லை-தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் தினவிழிப்புணர்வு பேரணி

    நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர்தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    நெல்லை:

    தென்காசியில் தேசிய வாக்காளர்கள் தினத்தையொட்டி நடந்த பேரணியை கோட்டாட்சியர் வெங்கடேஷ் தொடங்கி வைத்தார். இதில் தாசில்தார் அனிதா, தேர்தல் துணை வட்டாச்சியர் அரவிந்த்,நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு களக்காட்டில் மனித சங்கிலி நடந்தது. இதில் அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மோகன் குமார், மண்டல துணை தாசில்தார் ஜெயலட்சுமி, வருவாய் ஆய்வாளர் இப்ராஹிம் பாயிஸ் உள்பட பலர் கந்து கொண்டனர்.

    தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி என்.எஸ்.எஸ் அணி மற்றும் தேர்தல் கமி‌ஷன் இணைந்து நடத்திய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி மற்றும் பிரச்சாரம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜெயா தலைமை வகித்தார். அதிகாரிகள் குமார் பாண்டியன், விஜயகுமார், பேராசிரியர் வீரபத்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் மெர்லின் சீலர் சிங் வரவேற்றார். தேர்தல் துணை தாசில்தார் ரவீந்திரன் பேரணியை துவக்கிவைத்து வாக்களிக்க வேண்டியதின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார். இதில் ஏராளமான மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சேரன்மகாதேவி சப்- கலெக்டர் அலுவலகத்தில் ஓவிய போட்டி மற்றும் ஓவிய கண்காட்சி நடைபெற்றது . இதில் சேரன்மகாதேவி சப் - கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். இதில் பத்தமடை ஓவிய ஆசிரியர் மாரியப்பனின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது .

    ஓவிய போட்டியில் சேரன்மகாதேவி சுற்று வட்டாரத்தை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு பரிசுகளை வென்றனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு கவின் கலைக்கல்லூரி முன்னாள் முதல்வர் சந்திரா சேகரன்,சேரன்மகாதேவி தாசில்தார் விமலா ராணி, இந்தியன் வங்கி மேலாளர் ஜெயச்சந்திரன், ஓவிய ஆசிரியர் சிவராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    உடன்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரணியை உடன்குடி பஸ் நிலையம் அருகில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் தியாகராஜன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பேரணி வில்லிகுடியிருப்பு சந்திப்பு, உடன்குடி மெயின் பஜார் சந்திப்பு, சத்திய மூர்த்தி பஜார், பஸ்நிலையம் வழியாக உடன்குடி யூனியன் அலுவலகத்தை வந்து சேர்ந்தது.

    வழி நெடுக வாக்காளர் விழிப்புணர்வு சம்பந்தமான கோ‌ஷங்களை எழுப்பப்பட்டது.இதில் மாவட்ட மகளிர் திட்ட உதவி அலுவலர் சாமத்துரை, திருச்செந்தூர் தாசில்தார் செந்தூர் ராஜன்,தேர்தல் அலுவலர் கோமதி சங்கர்,தேர்தல் பிரிவு தலைவர் சுடலை, உடன்குடி வருவாய் ஆய்வாளர் பாரதி மீனா, கிராம அதிகாரிகள் கார்த்தீசன், சரவணன் மற்றும் திருச்செந்தூர்,உடன்குடி மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்துகொண்டனர்.

    எட்டயபுரத்தில் தேசிய வாக்காளர் தினம் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலத்துடன் கொண்டாடப்பட்டது. எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் துவங்கிய விழிப்புணர்வு பேரணியை மண்டல துணை தாசில்தார் ராமகிருஷ்ணன் முன்னிலையில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அழகர் துவக்கி வைத்தார். பேரணி பேட்டை ரோடு வழியாக மெயின் பஜாரை கடந்து மேலவாசல்,பேருந்து நிலையம் வழியாக பாரதி மணிமண்டபம் வந்தடைந்தது.

    ஊர்வலத்தில் எட்டயபுரம் தேர்தல் துணை தாசில்தார் நிஷாந்தினி, தேர்தல் உதவியாளர் சித்ராதேவி, வருவாய் ஆய்வாளர் பாலமுருகன், எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பேராசிரியர் ராணி உட்பட கல்லூரி மாணவிகள் மற்றும் தாலுகா அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    செய்துங்கநல்லூரில் தேசிய வாக்காளர் தினவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஸ்ரீவைகுண்டம் துணை தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். வருவாய் ஆய்வாளர் அய்யனார் வரவேற்றார். ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் செல்வ பிரகாஷ் பேரணியை துவக்கி வைத்தார்.

    பேரணி கால்நடை ஆஸ்பத்திரியில் இருந்து துவங்கி சந்தை வரை வந்து சென்றது. பேரணியில் செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஆறுமுகசேகர், உடற்பயிற்சி கல்வி ஆசிரியர் ராகுல், விரிவுரையாளர்கள் சாகுல்ஹமீது, ராஜ்குமார், கண்ணன், கிராம நிர்வாக அதிகாரி சண்முகசுந்தரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×