search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வால்பாறை பகுதியில் வீட்டு சுவரை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்
    X

    வால்பாறை பகுதியில் வீட்டு சுவரை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்

    வால்பாறை பகுதியில் தொடர்ந்து காட்டுயானைகள் இரவு நேரங்களில் எஸ்டேட் பகுதிகளில் புகுந்து வீடுகளை சேதப்படுத்தி வருகிறது.

    வால்பாறை:

    வால்பாறை பகுதியில் தொடர்ந்து காட்டுயானைகள் இரவு நேரங்களில் எஸ்டேட் பகுதிகளில் புகுந்து வீடுகளை சேதப்படுத்தி வருகிறது.

    கடந்த ஒரு வாரமாக அக்காமலை, கருமலை, வெள்ள மலை ஆகிய எஸ்டேட் பகுதிகளில் முகாமிட்டு சுற்றித் திரிந்து வரும் இரண்டு குட்டிகள் உள்பட 7 யானைகள் கொண்ட கூட்டம் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு அக்காமலை எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தன.

    அங்கு குடியிருப்பில் இருந்த வாழைமரங்களை சாப்பிட்டு சேதப்படுத்தியது. பின்னர் அங்கிருந்து சென்ற காட்டுயானைகள் எஸ்டேட் மேலாளர் திலக்சேத்தி என்பவரின் குடியிருப்புக்குள் புகுந்து வீட்டின் சமையலறை சுவரை உடைத்து துதிக் கையை உள்ளே விட்டு வீட்டிலிருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தி விட்டு சாப்பிடுவதற்கு ஏதும் கிடைக்காத நிலையில் குடியிருப்பை சுற்றி சுற்றி வந்தது.

    வீட்டிலிருந்த மேலாளர் திலக்சேத்தி வால்பாறை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் காட்டுயானைகளை வனப் பகுதிக்குள் விரட்டி விட்டனர்.

    வனத்துறையினர் தொடர்ந்து காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து குடியிருப்புக்குள் நுழைய விடாமல் தடுப்பு நடவடிக்கை மேற் கொண்டு வருகின்றனர்.ஆனாலும் நள்ளிரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானைகள் தொடர்ந்து சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.

    Next Story
    ×