search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வார்தா புயல் பாதிப்பு: மீனவர்களுக்கு ரூ.19 கோடி நிதி உதவி - அமைச்சர் ஜெயக்குமார் தகவல்
    X

    வார்தா புயல் பாதிப்பு: மீனவர்களுக்கு ரூ.19 கோடி நிதி உதவி - அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

    வார்தா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூ.19 கோடி நிதி உதவி வழங்கி உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
    சென்னை:

    சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி கேள்வி நேரத்தின்போது, “திருவொற்றியூரில் 10 இடங்களில் தூண்டில் வளைவுக்காக போடப்பட்டிருந்த கற்கள் வர்தா புயலால் கடலில் சரிந்துள்ளதாகவும், கட்டுமரம், நாட்டுப் படகுகள், விசைப்படகுகள் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு உதவித்தொகை வழங்கவில்லை என்றும் அதில் அறிவித்துள்ள தொகை குறைவாக உள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

    இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் ஆட்சேபம் தெரிவித்து அவையில் தவறான தகவலை சொல்லக்கூடாது என்றும், இதற்காக அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கூறிவிட்டு சில விளக்கங்களை தெரிவித்தார்.

    அப்போது, வார்தா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்காக ரூ.19 கோடி நிதிஉதவி வாரி வழங்கியுள்ளதாக கூறினார். வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று அமைச்சர் சொன்னதற்கு தி.மு.க. எம்.ஏல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×