search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிர்பயத்திலும் கலங்காத பெண் போலீஸ் துர்காதேவி
    X

    உயிர்பயத்திலும் கலங்காத பெண் போலீஸ் துர்காதேவி

    சென்னை ஐஸ்அவுஸ் போலீஸ்நிலையம் எரிந்த போது உயிர்பயத்திலும் கலங்காமல் உயர் அதிகாரிகளுக்கு வாக்கி டாக்கியில் தகவல் தெரிவித்த துர்காதேவியின் இந்த செயல் பாராட்டை பெற்றுள்ளது.
    சென்னை:

    சென்னையில் மாணவர்களுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தின் போது வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.

    சென்னை ஐஸ் அவுஸ் போலீஸ் நிலையம் தீவைத்து கொளுத்தப்பட்டது. இதில் போலீஸ் நிலையத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான மோட்டார் சைக்கிள்களும் எரிந்து நாசமானது.

    போலீஸ் நிலையத்திற்கு தீ வைத்தவர்கள் போலீஸ் நிலையத்தை வெளிபக்கமாக பூட்டிவிட்டு பெட்ரோல் குண்டுகளை வீசினர்.

    அப்போது போலீஸ் நிலையத்தினுள் 16 போலீசார் இருந்தனர். அவர்கள் உயிர் பிழைப்பதற்காக போராடினர். போலீஸ் நிலையத்தின் முன்புறம் தீ கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்ததால் அவர்களால் வெளியே வர முடியவில்லை. இதனால் செய்வதறியாது திகைத்தனர்.

    அப்போது போலீஸ் நிலையத்தினுள் இருந்த துர்கா தேவி என்ற பெண் போலீசும் உயிர் பயத்தில் தவித்தபடி இருந்தார். பரபரப்பான அந்த சூழ்நிலையில் கலங்காமல் அவர் உடனடியாக வாக்கி டாக்கியில் போலீஸ் நிலையம் தீப்பற்றி எரியும் தகவலை தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்தே போலீஸ் உயர் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். போலீஸ் நிலையத்தில் வலது பக்கத்தில் உள்ள ஜன்னலை உடைத்து உள்ளே இருந்த அனைத்து போலீசாரையும் பத்திரமாக வெளியில் வரச்செய்தனர்.

    பெண் போலீஸ் துர்கா தேவியின் இந்த செயல் பாராட்டை பெற்றுள்ளது.
    Next Story
    ×