என் மலர்

  செய்திகள்

  சத்திரப்பட்டி பகுதியில் பூசணிக்காய் விளைச்சல் குறைந்ததால் விவசாயிகள் கவலை
  X

  சத்திரப்பட்டி பகுதியில் பூசணிக்காய் விளைச்சல் குறைந்ததால் விவசாயிகள் கவலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சத்திரப்பட்டி பகுதியில் இனிப்பு பூசணிக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

  சத்திரப்பட்டி:

  திண்டுக்கல் அருகே சத்திரப்பட்டி, கொத்தயம், 16-புதூர், தேவத்தூர், கப்பலப்பட்டி ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் இனிப்பு பூசணி நடவு செய்துள்ளனர்.

  போதிய மழை இல்லாததால் இனிப்பு பூசணி விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் விலை உயர்வடைந்துள்ளது.

  கடந்த மாதம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் 10 கிலோ இனிப்பு பூசணி ரூ.40-க்கு மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது 10 கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

  இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் தற்போது 10 கிலோ ரூ.50 முதல் ரூ.60-க்கு கொள்முதல் செய்யப்பட்டாலும் விதை, நடவு, ஆட்கூலி, அறுவடை ஆகியவற்றுக்கு ஆகும் செலவு விற்பனை விலையை விட அதிகமாக உள்ளதால் இனிப்பு பூசணிக்கு கட்டுப்படியான விலை கிடைக்க வில்லை என்றனர்.

  Next Story
  ×