என் மலர்

  செய்திகள்

  ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
  X

  ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  20 வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்” என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.
  சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது:-

  அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளை விமர்சித்து பலனில்லை. ஏனென்றால் நமக்கு சித்தப்பா மீது கோபமும் இல்லை. சித்தி மீது வெறுப்பும் இல்லை.

  மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை காங்கிரஸ் கட்சி சரியான விதத்தில் பயன்படுத்தி இருக்கவேண்டும். ஆனால் அதை செய்ய நாம் தவறிவிட்டோம் என்றே நினைக்க தோன்றுகிறது. தற்போது நமது நிலைமையை யோசிக்க வேண்டும். தமிழகத்தின் 3-வது பெரிய கட்சியாக பா.ஜ.க. வந்தால் நாம் இருப்பதே வீணானது.

  இவ்வாறு அவர் பேசினார்.

  பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

  சிவாஜியின் சிலையை அகற்றி, அந்த சிலையை மணிமண்டபத்தில் வைப்பதை விட, மெரினாவிலேயே தலைவர்களின் சிலைகள் உள்ள வரிசையிலேயே வைப்பது நன்றாக இருக்கும். இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நிர்வாகிகள் குழு முதல்-அமைச்சரை சந்தித்து மனு அளிக்க உள்ளனர்.

  பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ப.சிதம்பரம் போன்ற வல்லுனர்கள் மக்களிடையே நேரிடையாக சென்று எடுத்துரைக்க வேண்டும். அவர் போன்ற பொருளாதார வல்லுனர்களை காங்கிரஸ் கட்சி பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

  20 வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து இருந்தால், இதைவிட ஒரு பெரிய வெற்றிடத்தை அவர் நிரப்பியிருக்க முடியும். அப்படி அவர் வந்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும். ஆனால் தற்போது அது கஷ்டம். அவரால் முடியாது என்று கூறவில்லை. தற்போதைய நிலையில் அது கஷ்டம் என்று தான் கூறுகிறேன்.

  தி.மு.க. கூட்டணியில் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பதே எங்கள் விருப்பம். ஆனால் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் தொடர வேண்டுமா? வேண்டாமா? என்பதையெல்லாம் கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×