என் மலர்

  செய்திகள்

  எலியார்பத்தி டோல்கேட் ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்
  X

  எலியார்பத்தி டோல்கேட் ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரை அருகே எலியார்பத்தி டோல்கேட் ஊழியர்கள் இன்று திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் கட்டணமின்றி வாகனங்கள் சென்றன.

  மதுரை:

  மதுரை வளையங்குளம் அருகே உள்ள எலியார் பத்தியில் 4 வழிச்சாலை டோல்கேட் உள்ளது. இங்கு ஆவியூரைச் சேர்ந்த ஒரு பெண் ஊழியர் பணிபுரிந்து வந்தார்.

  அவர் மீது பொய் புகார் கூறி நிர்வாகம் சஸ்பெண்டு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு மற்ற ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

  பெண் ஊழியர் சஸ்பெண்டை ரத்து செய்யக்கோரி அவர்கள் இன்று காலை திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக காலை 8 மணி முதல் 2 மணி நேரத்திற்கு அந்த வழியாக சென்ற லாரி, பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் கட்டணம் ஏதும் வசூலிக்காமல் கடந்து சென்றன. பல வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியோடு சென்றதை பார்க்க முடிந்தது.

  இந்த திடீர் போராட்டம் பற்றி தகவல் கிடைத்ததும் திருமங்கலம் டி.எஸ்.பி. சங்கர் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு வந்து, ஊழியர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதன் பிறகு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினார்கள்.

  Next Story
  ×