என் மலர்

  செய்திகள்

  வார்தா புயல் சேதங்கள் சீரமைக்கப்பட்டதையடுத்து கிண்டி சிறுவர் பூங்கா இன்று மீண்டும் திறப்பு
  X

  வார்தா புயல் சேதங்கள் சீரமைக்கப்பட்டதையடுத்து கிண்டி சிறுவர் பூங்கா இன்று மீண்டும் திறப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வார்தா புயல் சேதங்கள் சீரமைக்கப்பட்டதையடுத்து கிண்டி சிறுவர் பூங்கா இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளதாக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.
  சென்னை:

  சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களை கடந்த 12.12.16 அன்று வார்தா புயல் தாக்கியது. இதனால் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்காக்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.

  இந்த பாதிப்புகளை சீரமைக்க துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி, கிண்டி சிறுவர் பூங்கா 30.12.16 (வெள்ளிக்கிழமை) அன்று பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளது. மேலும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ளது.

  இந்தத் தகவலை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் வெளியிட்டுள்ளார்.
  Next Story
  ×