என் மலர்

  செய்திகள்

  திருவள்ளூர் அருகே லாரி மோதி டெய்லர் பலி
  X

  திருவள்ளூர் அருகே லாரி மோதி டெய்லர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவள்ளூர் அருகே லாரி மோதி டெய்லர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திருவள்ளூர்:

  திருவள்ளூரை அடுத்த ஈக்காடு பெத்தியால்புரம் மேல்பாதி பகுதியை சேர்ந்தவர் விஜயபாபு (வயது 40).அம்பத்தூரில் உள்ள துணி ஏற்றுமதி நிறுவனத்தில் டெய்லராக பணி புரிந்து வந்தார்.

  இவர் நேற்று இரவு பொருட்கள் வாங்க திருவள்ளூர் பஜாருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பினார்.

  வண்டிக்கார தெருவில் இருந்து கிழக்கு குளக்கரை தெருவுக்கு சென்றபோது எதிரே அலமதி இருந்து மத்திய பிரதேசம் மாநிலத்துக்கு தார் பேரல் ஏற்றி வந்த லாரி திடீரென பைக் மீது மோதியது. இதில் தலை நசுங்கி இறந்தார்.

  விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். திருவள்ளூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக் குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

  Next Story
  ×