என் மலர்

  செய்திகள்

  கீழக்கரையில் கடையில் பணம் திருடிய 2 சிறுவர்கள் கைது
  X

  கீழக்கரையில் கடையில் பணம் திருடிய 2 சிறுவர்கள் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கீழக்கரையில் கடையில் பணம் திருடியதாக 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

  கீழக்கரை:

  கீழக்கரை கிழக்கு நாடார் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60). இவர் அந்தப் பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு சாமியாநகரைச் சேர்ந்த 17 வயது சிறுவனும் காஞ்சிரங்குடியை சேர்ந்த 12 வயது சிறுவனும் வந்துள்ளனர்.

  அவர்கள் பொருட்கள் வாங்கும் போது, கடையில் கல்லாப்பெட்டியில் இருந்து பணத்தை திருடியதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. கீழக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் வழக்குப் பதிவு செய்து 2 சிறுவர்களையும் கைது செய்தார்.

  கமுதி கீழமுடி மன்னார் கோட்டை முருகேசன் (57) அந்த பகுதியில் சிறிய கடை வைத்துள்ளார். அந்த கடையில் திருட முயன்றதாக ராஜபாண்டி (22) என்பவர் கையும் களவுமாக பிடி பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டார். கமுதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குப் பதிவு செய்து ராஜபாண்டியை கைது செய்தனர்.

  Next Story
  ×