என் மலர்

  செய்திகள்

  தேனி மாவட்டத்தில் திருட்டுத்தனமாக மதுவிற்ற 50 பேர் மீது வழக்கு
  X

  தேனி மாவட்டத்தில் திருட்டுத்தனமாக மதுவிற்ற 50 பேர் மீது வழக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேனி மாவட்டத்தில் திருட்டுத்தனமாக மதுவிற்ற 50 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. 220 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
  தேனி:

  முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி தமிழகத்தில் டாஸ்டாக் மதுகடைகள் 3 தினங்கள் அடைக்க அரசு உத்தரவிட்டது. இதனால் பலர் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்தனர். அவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

  இதையடுத்து தேனி மாவட்டத்தில் தேனி, கம்பம், கூடலூர், ஆண்டிப்பட்டி, உத்தமபாளையம், சின்னமனூர், போடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

  இந்த சோதனையில் கோட்டூர் தங்கராஜ், கம்பம் பாண்டியன், விஜயகுமார், போடி மூர்த்தி, ஜெயராணி, பூதிப்புரம் ஆண்டவர், சின்னமனூர் செந்தில் முருகன், தென்கரை கோபி, மார்க்கையன்கோட்டை முருகேசன், லோயர்கேம்ப் ரவி, கூடலூர் வனிதா, வருசநாடு ராஜசேகர், கண்ட மனூர் பால சுப்பிரமணியன், குமணன்தொழு மூக்கன், சில்வார்பட்டி தங்கமலை, சின்னமனூர் முத்து உள்பட 50 பேர் பிடிபட்டனர்.

  அவர்களிடமிருந்து 220 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
  Next Story
  ×