என் மலர்

  செய்திகள்

  ஜெயலலிதாவுக்காக தமிழக தலைவர்கள் பிரார்த்தனை
  X

  ஜெயலலிதாவுக்காக தமிழக தலைவர்கள் பிரார்த்தனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முதல்-அமைச்சர் ஜெயலலிதா நலம் பெற தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.
  சென்னை:

  முதல்-அமைச்சர் ஜெயலலிதா நலம் பெற தமிழ அரசியல் தலைவர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.

  தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்: ஜெயலலிதா பூரண உடல் நலம் பெற என் சார்பிலும், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பிலும் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

  மேதகு ஆளுநரும், தமிழக அரசும், மத்திய அரசும் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை தேறிட உலகின் எந்தப்பகுதியில் இருந்தும் சிறந்த மருத்துவர்களோ, தேவையான சிறப்பு மருந்துகளோ தேவைப்பட்டால் வரவழைத்து அதிகபட்ச அக்கறையோடு அவரது உடல்நிலையை சரிசெய்ய எல்லா உயரிய, உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

  அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு: ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு என்ற தகவல் அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். எல்லாமே தோற்றுப் போனாலும் மருத்துவத்தில் அதிசயம் நிகழும் என்று காத்திருக்கிறோம்.

  தமிழக முதல்வர் குணம் அடைய இந்தியாவே கும்பிட்ட கைகளுடன் பிரார்த்திக்கிறது. அவர் விரைவில் நலமடைய பிரார்த்திக்கிறேன்.

  திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி: முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நேற்று மாலை முதல் ஏற்பட்ட பின்னடைவு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

  எம்.ஜி.ஆரை எப்படி மருத்துவ வசதி பெற்ற தனி விமானம் மூலம் அழைத்துச் சென்று, சிகிச்சை அளித்து குணப்படுத்தியது போல செய்யும் வாய்ப்பு பற்றி பரிசீலித்தல் அவசரம் அவசியம். முதல்-அமைச்சர் விரைவாக உடல்நலம் தேற நமது விழைவுகள்.

  மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா: தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்ற செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

  அவர் பரிபூரண உடல் நலம் பெற்று தனது முதலமைச்சர் பொறுப்புகளை மீண்டும் ஆற்றுவதற்கு இறைவன் கிருபை செய்ய பிரார்த்திக்கிறேன்.

  நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:- தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற்று மீண்டும் முழு பலத்தோடு பணியை தொடர உள்ளன்போடு என் விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

  புதிய நீதிக்கட்சிதலைவர் ஏ.சி.சண்முகம்: ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்று செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.

  மிகுந்த மன வலிமை மிக்க முதல்வர். தற்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை மூலம் அவருக்கு ஏற்பட்டுள்ள இடரில் இருந்து மீண்டு பூரண நலம்பெற வேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன்: ஜெயலலிதாவுக்கு நல்ல சிகிச்சை தொடரவும், பூரண நலம் பெறவும், இறையருள் துணை நிற்குமாக.

  பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்: ஜெயலலிதா பரிபூரண நலத்துடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் தமிழக மக்களின் பிரார்த்தனைகளுடன் மீண்டும் தமிழகத்தின் நலன் காக்க வர வேண்டும்.

  நீண்ட நெடிய ஆயுளுடன் வாழ வேண்டி பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

  இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
  Next Story
  ×