என் மலர்

  செய்திகள்

  தமிழ்நாட்டில் இன்று சில இடங்களில் மழை பெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு
  X

  தமிழ்நாட்டில் இன்று சில இடங்களில் மழை பெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை மைய இயக்குனர் தெரிவித்தார்.
  சென்னை:

  தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை சரியாக பெய்யாததால் பொதுமக்களும், விவசாயிகளும் கவலை அடைந்து இருந்தனர். இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான நாடா புயல் வலு இழந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி காரைக்கால் அருகே கரையை கடந்தது. இதையொட்டி தமிழ்நாட்டில் ஓரளவுக்கு மழை பெய்தது.

  இந்தநிலையில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகி உள்ளது.

  இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

  தென் கிழக்கு அரபிக்கடலில் லட்சத்தீவு அருகே காற்று மண்டலத்தில் ஒரு மேல் அடுக்கு சுழற்சி உள்ளது.

  மேலும் தெற்கு அந்தமான் கடல் மற்றும் வட சுமத்ரா தீவு பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. அது அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது. அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் தீவிரம் அடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது. இந்த நிகழ்வுகளை கண்காணித்து வருகிறோம்.

  குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையில் ஒரு சில நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

  தமிழ்நாட்டில் சமீபத்தில் 3 நாட்கள் மழை பெய்துள்ளது. அதற்கு முன்பாக தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 71 சதவீதம் குறைவாக பெய்தது. ஆனால் கடந்த 3 நாட்களாக பெய்த மழையின் காரணமாக நேற்றைய நிலவரப்படி 61 சதவீதம் குறைவாக பெய்துள்ளது.

  இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் கூறினார்.

  அவரிடம், அந்தமான் அருகே உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகத்தை நோக்கி வருமா? என்று கேட்டதற்கு, “அதை கண்காணித்து கொண்டிருக்கிறோம். அது எங்கு செல்லும் என்று இப்போது எதுவும் சொல்ல இயலாது என்றார்” அவர்.

  தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

  சிவகிரி 6 செ.மீ., குன்னூர் 5 செ.மீ., சிவகங்கை, நாங்குநேரி, பரமக்குடி தலா 4 செ.மீ., சென்னை விமானநிலையம், தாமரைப்பாக்கம், கோத்தகிரி, குமாரபாளையம், ஸ்ரீபெரும்புதூர் தலா 3 செ.மீ.,

  இளையான்குடி, பேச்சிப்பாறை, பூண்டி, பெரியநாயக்கன்பாளையம், ஊட்டி, முதுகுளத்தூர், சோழவரம், அருப்புக்கோட்டை, மேட்டுப்பாளையம், கொளப்பாக்கம், திருவாலங்காடு தலா 2 செ.மீ., கோவை, கடலாடி, ராஜபாளையம், மானாமதுரை, மதுரை விமானநிலையம், செங்குன்றம், கோவை தெற்கு, பவானி, காட்டுக்குப்பம், பள்ளிப்பட்டு, பீளமேடு, கொடைக்கானல், உத்தமபாளையம் உள்பட 40 இடங்களில் தலா 1 செ.மீ.மழை பெய்துள்ளது.
  Next Story
  ×