என் மலர்

  செய்திகள்

  காவிரி பிரச்சினையில் நடிகர்கள் போராட மறுப்பது மிகப்பெரிய துரோகம்: பி.ஆர். பாண்டியன்
  X

  காவிரி பிரச்சினையில் நடிகர்கள் போராட மறுப்பது மிகப்பெரிய துரோகம்: பி.ஆர். பாண்டியன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காவிரி பிரச்சினையில் தமிழக நடிகர்கள் போராட மறுப்பது மிகப்பெரிய துரோகம் என பி.ஆர். பாண்டியன் கூறினார்.

  மன்னார்குடி:

  தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் மன்னார்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

  காவிரி டெல்டா மாவட்டங்கள் பேரழிவை சந்தித்து கொண்டிருக்கிறது. இனி வாழ முடியாது என்ற நெருக்கடி நிலைக்கு விவசாயிகள் சென்று விட்டனர். விவசாயிகளின் தற்கொலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

  இனியும் தமிழக அரசு வேடிக்கை பார்க்க கூடாது. உடனடியாக அமைச்சர்கள் கொண்ட குழுவை அனுப்பி விவசாயிகளை ஆறுதல் படுத்த வேண்டும்.

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விடாமல் கர்நாடகத்தை சேர்ந்த திரைப்பட நடிகர்கள் போராட்டத்தில் நேரடியாக ஈடுபடுகிறார்கள்.

  தமிழ் நாட்டில் இருக்கும் நடிகர்கள் இதுவரை காவிரி என்று சொல்வதற்கே தயங்குவது மிகப்பெரிய வேதனை அளிக்கிறது.

  விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சூழலில் நடிகர் சங்கங்கள் காவிரி போராட்டத்தில் ஈடுபட மறுப்பது ஏற்க முடியாது. மிகப்பெரிய துரோகமாகும்.

  இன்று நடைபெறும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும், காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்ட இருக்கும் பணியை தடுத்து நிறுத்துவதற்கும் உரிய தீர்மானங்களை மத்திய அரசிற்கு முன் மொழிய வேண்டும்.

  மேலும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். போராட்டத்தை ஏற்க மறுத்தால் தென்னிந்திய நடிகர் சங்கத்தை கலைத்து விட்டு தமிழக நடிகர் சங்கம் என்று உருவாக்க வேண்டும். அதற்கு தமிழர்கள் தான் தலைமை ஏற்க வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×