என் மலர்

  செய்திகள்

  ராஜபாளையம் அருகே ஓட்டல் உரிமையாளர் தீயில் கருகி பலி
  X

  ராஜபாளையம் அருகே ஓட்டல் உரிமையாளர் தீயில் கருகி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜபாளையம் அருகே ஓட்டல் உரிமையாளர் தீயில் கருகி பலியானார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  ராஜபாளையம்:

  ராஜபாளையம் அருகே அட்டைமில் முக்கு ரோட்டில் ஓட்டல் நடத்தி வருபவர் மோகன் (வயது 40). இவர் ஓட்டலுக்கு வருவதற்கு முன்பு வீட்டில் உள்ள சமையல் அறைக்கு சென்று, டீ போடுவதற்காக கேஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது தீ குபீர் என பிடித்தது. இதனால் அவரது உடலில் தீக்காயம் ஏற்பட்டது.

  உடனடியாக அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்தியில் அனுமதித்தனர்.

  ஆனால் சிகிச்சை பலனின்றி மோகன் நேற்று இரவு உயிர் இழந்தார்.

  இதுகுறித்து கீழ ராஜகுலராமன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜேசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  ஓட்டல் உரிமையாளர் மோகன் டீபோட தீயைபற்ற வைத்தபோது சிலிண்டரில் கேஸ் கசிவு ஏற்பட்டு இந்த விபத்து நடந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  Next Story
  ×