என் மலர்

  செய்திகள்

  வேலாயுதம்பாளையம் அருகே முதியவர் தூக்கு போட்டு தற்கொலை
  X

  வேலாயுதம்பாளையம் அருகே முதியவர் தூக்கு போட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேலாயுதம்பாளையம் அருகே முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  வேலாயுதம்பாளையம்:

  கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம், மூலிமங்கலம் அருகே உள்ள பிள்ளையார் கோவில் பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருபவர் பழனிசாமி (வயதுது 86). இவருக்கு 2 கால்களிலும் மூட்டு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சில மாதங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

  மீண்டும் அவருக்கு மூட்டு வலி வந்துள்ளது. இந்த நிலையில் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவருக்கு வலி குறையவில்லை. இதனால் மன வேதனையடைந்த பழனிசாமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயன்றார்.

  இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு கரூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×