என் மலர்

  செய்திகள்

  திருவண்ணாமலை அருகே வனப்பகுதியில் புள்ளிமானை வேட்டையாடிய வாலிபர் கைது
  X

  திருவண்ணாமலை அருகே வனப்பகுதியில் புள்ளிமானை வேட்டையாடிய வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவண்ணாமலை அருகே வனப்பகுதியில் புள்ளிமானை வேட்டையாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

  திருவண்ணாமலை:

  திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள கொண்டம் சொரகுளத்தூர் வனப்பகுதியில் திருவண்ணாமலை வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

  அப்போது 4 பேர் புள்ளிமானை வேட்டையாடிவிட்டு திரும்புவதை பார்த்தனர். வனத்துறையினரை 4 பேரும் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

  ஆனாலும் வனத்துறையினர் துரத்தி சென்று ஒரு வரை மட்டும் பிடித்தனர். மற்ற 3 பேரும் புள்ளி மானை வேட்டையாடிய துப்பாக்கியுடன் தப்பி சென்று விட்டனர்.

  பிடிபட்ட கொண்டம் நரிக்குறவர் பகுதியை சேர்ந்த வேங்கடேசன் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து புள்ளிமானும், பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய பிரதாப், சுமன், சின்னையன் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

  Next Story
  ×