search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு பஸ்சில் பயணம் செய்த திருவண்ணாமலை கலெக்டர் பிரசாந்த் வடநேரே
    X
    அரசு பஸ்சில் பயணம் செய்த திருவண்ணாமலை கலெக்டர் பிரசாந்த் வடநேரே

    ஜவ்வாதுமலை ஆய்வு: அரசு பஸ்சில் பயணம் செய்த திருவண்ணாமலை கலெக்டர்

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர் ஆதாரத்தை பெருக்கும் நோக்குடன் (நீர்நிலை சேகரிப்பு திட்டம் குறித்து) கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே ஜவ்வாதுமலை பகுதியில் உள்ள கிராமங்களில் மாவட்ட நீர்வடி மேம்பாட்டு முகமை மூலம் ஆய்வு செய்தார்.
    திருவண்ணாமலை:

    பலாமரத்தூர் கிராமத்தில் நீர்வடி முகமையினை மாதிரி நீர்வடி முகடாக தேர்வு செய்து ஒவ்வொரு மழைத்துளியையும் அந்த நிலத்திலேயே சேகரிக்கும் தொழில்நுட்ப முறைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

    மேலும் அவர், நீர்சேகரிப்பு கட்டமைப்புகள், மண்அரிப்பு தடுப்பு முறைகள் குறித்து விவசாயிகளிடமும், அலுவலர்களிடமும் கருத்துகளை கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து கலெக்டர் குன்னுரெட்டி, தமுக்காலூர், தொப்பூர், திமிரி மரத்தூர் ஆகிய கிராம பகுதியில் உள்ள தடுப்பணைகள், சிறிய நீர்தேக்கங்கள், கசிவுநீர் குட்டை, நீர் வழித்தடங்களை நடந்து சென்றே ஆய்வு செய்தார்.

    பின்னர் பலாமரத்தூர் கிராமத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அதைத் தொடர்ந்து வேளாண்மை துறை சார்பில், வேளாண்மை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கைத்தெளிப்பான்கள் வழங்கப்பட்டன.

    இதைத் தொடர்ந்து ஜமுனாமரத்தூருக்கு ஆய்வுக்கு சென்ற கலெக்டர் போளூரில் இருந்து ஜமுனாமரத்தூருக்கு செல்லும் அரசு பஸ்சில் மக்களோடு மக்களாய் பயணம் செய்தார். கலெக்டர் பஸ்சில் வருவதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இது மலைவாழ் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    மாவட்ட வருவாய் ஆய்வாளர் பழனி, வேளாண்மை இணை இயக்குனர் கலாவதி, நேர்முக உதவியாளர் சுப்பையா (வேளாண்மை), மாவட்ட நீர்வடி முகமை துணை இயக்குனர் கண்ணகி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் உடன் சென்றனர்.

    இதுகுறித்து கலெக்டர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மலை கிராமத்தில் ஆய்வு என்பதால் கலெக்டருடன் செல்ல பல அரசு அதிகாரிகள் தங்களது அரசு வாகனங்களை பயன்படுத்துவார்கள். இதனால் சரியான நேரத்தில் ஆய்வு செய்வதில் இடர்பாடு ஏற்படும். மேலும், பல இடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படலாம் என்று கருதிய கலெக்டர் அரசு பஸ்சில் சென்று ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டார்.

    கலெக்டர் பஸ்சில் வருவதை பார்த்த பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர்’ என்றார்.

    Next Story
    ×