search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக தொண்டு நிறுவன நிர்வாகிகள் பல லட்சம் பணம் மோசடி
    X

    வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக தொண்டு நிறுவன நிர்வாகிகள் பல லட்சம் பணம் மோசடி

    வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி செய்த திண்டுக்கல்லை சேர்ந்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    தேனி மாவட்டம் கெங்குவார் பட்டி, ஜி.கல்லுப் பட்டியை சேர்ந்தவர் மல்லிகா, திண்டுக்கல் எஸ்.பியிடம் மனு அளித்து கூறியதாவது,

    எனது மகன் வெங்கடேசனுக்கும், திண்டுக்கல் தனியார் தொண்டு நிறுவனம் நடத்தும் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. தொண்டு நிறுவனம் நடத்துபவர் வெளி நாட்டிற்கு எனது மகனை அனுப்பி வைப்பதாககூறி ரூ.2 லட்சம் வாங்கினார். இதற்காக அனைத்து ஆவணங்களையும் கொடுத்தோம்.

    இதேபோல் ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்த மணிகண்டனும், ரூ.2 லட்சம் பணத்தை அளித்தார்.

    ஆனால் அவர்கள் பேசியபடி வெளிநாட்டில் வேலை வாங்கி தரவில்லை. பணமும் தரவில்லை. கேட்டால் விசா வந்தவுடன் அனுப்புகிறோம் என்கின்றனர்.

    நாங்கள் தொடர்ந்து பணத்தை கேட்டபோது எங்களை கூலிப்படை வைத்து கொலை செய்வோம் என மிரட்டுகின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து எங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்றனர்.

    மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு எஸ்.பி உத்தரவிட்டார். இதுகுறித்து விசாரணை நடத்தி இன்ஸ்பெக்டர் தேன்மொழி தலைமையிலான போலீசார் மோசடி செய்தர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×