என் மலர்

  செய்திகள்

  ராசிபுரம் அருகே தீக்குளித்த பிளஸ்-1 மாணவி பலி
  X

  ராசிபுரம் அருகே தீக்குளித்த பிளஸ்-1 மாணவி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராசிபுரம் அருகே வயிற்று வலி காரணமாக தீக்குளித்த பிளஸ்-1 மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
  ராசிபுரம்:

  ராசிபுரம் அருகேயுள்ள புதுப்பாளையம், கிழக்கு தெருவில் வசித்து வருபவர் செல்லமுத்து. இவர் புதுப்பாளையம் பகுதியில் தள்ளுவண்டி கடை வைத்து திண்பண்டங்களை விற்பனை செய்து வருகிறார். இவருடைய மகள் திவ்யா (வயது 16) புதுப்பாளையம் அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

  மாணவி திவ்யா கடந்த மாதம் 30-ந் தேதி வயிற்று வலி காரணமாக மண் எண்ணையை தன் உடல் மீது ஊற்றிக் கொண்டு தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது அதை கண்ட அப்பகுதியினர் திவ்யா மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். படுகாயம் அடைந்த திவ்யாவிற்கு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக் காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

  இதனிடையே சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திவ்யா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இது பற்றி ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×