என் மலர்
செய்திகள்

திருத்துறைப்பூண்டி அருகே வனப்பகுதியில் ஆண் பிணம்: போலீசார் விசாரணை
திருத்துறைப்பூண்டி அருகே வனப்பகுதியில் ஆண் பிணம் கழுத்தில் ரத்த காயங்களுடன் கிடந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஓவரூர் வெள்ளாங்கால் மறைக்கா கோரையாறு சட்ரஸ் பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த வனப்பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கழுத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ் பெக்டர்கள் காமராஜ், ராஜ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story