என் மலர்

  செய்திகள்

  திருமங்கலம் அருகே திருமணமான நர்சிங் மாணவி திடீர் மாயம்
  X

  திருமங்கலம் அருகே திருமணமான நர்சிங் மாணவி திடீர் மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருமங்கலம் அருகே திருமணமான நர்சிங் மாணவி திடீர் மாயமானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

  திருமங்கலம்:

  திருமங்கலம் அருகே உள்ள கூடக்கோவில் போலீஸ் சரகத்துக்குட்பட்ட எலியார்பத்தியை சேர்ந்தவர் ராமஜோதி (வயது 19).

  இவருக்கும் செக்கானூரணி அருகே உள்ள தெப்பத்துப்பட்டியை சேர்ந்த மலைச்சாமி என்பவருக்கும் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

  ராமஜோதி சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த அவர் எலியார் பத்தியில் உள்ள தாய் வீட்டில் தங்கினார்.

  சம்பவத்தன்று வீட்டில் இருந்த ராமஜோதி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

  இதுகுறித்த புகாரின் பேரில் கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நர்சிங் மாணவியை தேடி வருகின்றனர்.

  Next Story
  ×