என் மலர்

  செய்திகள்

  மதுரையில் கல்லூரி பஸ் மோதி மாணவர் பலி
  X

  மதுரையில் கல்லூரி பஸ் மோதி மாணவர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரையில் கல்லூரி பஸ் மோதி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  மதுரை:

  மதுரை அருகே உள்ள முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளிமலை. இவரது மகன் சரவணன் (வயது20). இவர் அழகர் கோவில் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் மெக்கானிக்கல் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

  தினமும் இவர் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்றுவருவது வழக்கம். அதன்படி இன்று காலை வழக்கம்போல் சரவணன் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு புறப்பட்டார். அவர் அழகர்கோவில் ரோட் டில் சென்று கொண்டிருந் தார்.

  அப்போது ஒரு கல்லூரி பஸ் பின்னால் வந்தது. திடீரென அந்த பஸ் முன்னால் சென்று கொண்டிருந்த சரவணனின் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சரவணன், ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்தார்.

  உடனே அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு மதுரைஅரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பல னின்றி சரவணன் பரிதாப மாக இறந்தார்.

  இதுகுறித்து அப்பன் திருப்பதி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  அழகர்கோவில் ரோட்டில் அடிக்கடி இது போன்ற விபத்துக்கள் நடந்து வருகின்றன. இந்த ரோட்டில் செல்லும் கல்லூரி வாகனங்கள் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் அதிவேகத்துடன் சென்று அடிக்கடி விபத்தில் சிக்குவதும், இதனால் விலைமதிப்பில்லா உயிர்கள் பலியாவதும் தொடர்கதையாகி வருகிறது.

  மேலும் மோட்டார் சைக் கிள்களில் செல்பவர்களும் அழகர்கோவில் ரோட் டில் சாகச செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் போக்குவரத்து விதிகளை மதித்து செல்பவர்களும் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை போக்குவரத்து போலீசாரும் கண்டுகொள்வதில்லை என அப்பகுதி மக்கள் வேதனை யுடன் தெரிவித்தனர்.

  Next Story
  ×