என் மலர்

  செய்திகள்

  தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு
  X

  தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தக்கலை அருகே வீட்டில் முன் நிறுத்திய மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  தக்கலை:

  தக்கலை அருகே அடப்பு விளையை சேர்ந்தவர் வின்சென்ட்.  இவரது மனைவி மரிய புஷ்பம் (வயது 44). இவர் சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்தார்.  காலையில் பார்த்த போது வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

  அக்கம் பக்கத்தில் மோட்டார் சைக்கிளை தேடி பார்த்து விசாரித்தார். ஆனால் மோட்டார் சைக்கிள் எங்கும் இல்லை.

  இதுகுறித்து மரிய புஷ்பம் தக்கலை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் வழக்குபதிவு செய்து திருட்டுபோன மோட்டார் சைக்கிளை தேடி வருகிறார்.
  Next Story
  ×