என் மலர்

  செய்திகள்

  திருப்பத்தூரில் பைக் பெட்டியை உடைத்து 17 பவுன் நகை திருட்டு
  X

  திருப்பத்தூரில் பைக் பெட்டியை உடைத்து 17 பவுன் நகை திருட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பத்தூரில் பைக் பெட்டியை உடைத்து 17 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

  திருப்பத்தூர்:

  திருப்பத்தூர் அருகே உள்ள அண்ணான்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது 60), விவசாயி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பத்தூரில் உள்ள தேசிய மையமாக்கப்பட்ட வங்கியில் 17 பவுன் நகையை அடமானம் வைத்திருந்தார்.

  இந்த நிலையில் நேற்று அந்த நகையை மீட்டு விட்டு, தனது பைக்கில் இருந்த பாதுகாப்பு பெட்டியில் வைத்து பூட்டினார்.

  பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் அண்ணான்டப்பட்டி கூட்ரோடு என்ற இடத்தில் டீ சாப்பிடுவதற்காக பைக்கை நிறுத்தினார். அங்கு டீ சாப்பிட்டுவிட்டு மொபட்டில் வீட்டிற்கு சென்றார். பின்னர் நகையை வெளியே எடுப்பதற்காக பெட்டியை பார்த்தார்.

  அப்போது பெட்டியை உடைத்து அதில் இருந்த 17 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.இதுகுறித்து ஏகாம்பரம் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

  அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெட்டியை உடைத்து நகையை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

  Next Story
  ×