என் மலர்

  செய்திகள்

  தங்கம் விலை சவரனுக்கு ரூ.528 குறைந்தது
  X

  தங்கம் விலை சவரனுக்கு ரூ.528 குறைந்தது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.528 குறைந்து, ஒரு சவரன் 22,888-க்கு விற்பனையாகிறது.
  சென்னை:

  ஆபரண தங்கத்தின் விலை கடந்த மே மாதத்தின் இறுதியில் வீழ்ச்சி ஏற்பட்டு ரூ.21,800-க்கு விற்றது.

  ஆனால் ஜூன் மாதத்தில் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்தது. அந்த மாதத்தின் 27-ந் தேதி அதிகபட்சமாக ரூ.23, 784க்கு விற்பனை செய்யப்பட்டது.

  ஜூலை மாதத்திலும் இதே நிலையே நீடித்தது. அந்த மாதத்தின் கடைசி தினத்தில் பவுன் ரூ.24 ஆயிரத்தை தொட்டது. ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் தங்கம் விலை ரூ.23,504 ஆக குறைந்தது.

  கடந்த மாதத்தில் 8-ந்தேதி தங்கம் விலை ரூ.24 ஆயிரத்தை நெருங்கியது. அதன் பிறகு விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது.

  இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை குறைந்து வீழ்ச்சி ஏற்பட்டது. இன்றும் தங்கம் விலையில் சரிவு காணப்பட்டது. அதிரடியாக விலை வீழ்ச்சி ஏற்பட்டு பவுனுக்கு ரூ.22,888க்கு வந்தது.

  நேற்று மாலை கிராம் ரூ.2927 ஆகவும், பவுன் ரூ.23,416 ஆகவும் இருந்தது.

  இன்று காலை கிராமுக்கு ரூ.66 குறைந்தது ரூ.2861- க்கும் பவுன் ரூ.528குறைந்து ரூ.22,888க்கும் விற்பனையானது.

  கடந்த 5 தினங்களில் மட்டும் கிராமுக்கு ரூ.109 குறைந்து உள்ளது. அதாவது பவுனுக்கு ரூ.872 வீழ்ச்சி ஏற்பட்டு ரூ.23 ஆயிரத்துக்கு கீழேஇறங்கியது

  இதே போல் வெள்ளி விலையிலும் சரிவு காணப்பட்டது. வெள்ளி விலை கிராம் ரூ46.10 ஆகவும். ஒரு கிலோ ரூ43,065 ஆகவும் இருந்தது. ஒரு கிலோவுக்கு வெள்ளி விலை ரூ.1895 குறைந்து உள்ளது.
  Next Story
  ×