என் மலர்

  செய்திகள்

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மனுவை திரும்ப பெற வேண்டும் - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்
  X

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மனுவை திரும்ப பெற வேண்டும் - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் அளித்துள்ள மனுவை வாபஸ் பெற வேண்டும் என்று தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
  சென்னை:

  தமிழக தலைமை செயலாளர் ராம்மோகன ராவ், மத்திய நீர்வளத்துறை செயலாளர் சசிசேகருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

  காவிரி நடுவர்மன்றம் 5.2.2007 அன்று கூறிய இறுதி தீர்ப்பின் அடிப்படையில் காவிரி நீர் திறந்து விடுவதை கண்காணிப்பதற்காக 10.5.2013-ல் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.

  இதை தொடர்ந்து தமிழக அரசு காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையில் இதற்கு நிரந்தர தீர்வாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை தொடர்ந்து வற்புறுத்தி வந்தது.

  இந்த நிலையில் 20.9.2016 அன்று சுப்ரீம் கோர்ட்டு இது பற்றிய விவகாரத்தில் கர்நாடகா 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டதுடன் மத்திய அரசு 4 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் வாரியத்தை உருவாக்கி 4 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியது.

  கடந்த 29.9.2016 அன்று நடந்த டெல்லி கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் உரையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. இதன் மூலம்தான் நடுநிலையாகவும், தொழில்நுட்ப ரீதியிலும், சரியான மேலாண்மை அடிப்படையிலும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று கூறப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி உடனடியாக மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது.

  30.9.2016 சுப்ரீம் கோர்ட்டில் அட்டெர்னி ஜெனரல் முகுல் ரொகாத்கி 4.10.2016-க்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று கூறினார். மேலும் அட்டர்னி ஜெனரல் கர்நாடகா, தமிழ்நாடு புதுச்சேரி மாநிலங்கள் தங்கள் பிரதிநிதிகளை நியமிக்கும்படியும் கேட்டுக்கொண்டார். மேலும் மத்திய நீர்வள இணை செயலாளரும் தமிழக அரசுக்கு 30.9.2016 அன்று கடிதம் எழுதினார். அதிலும் தமிழக பிரதிநிதியை நியமிக்கும்படி கேட்டுக்கொண்டு இருந்தார்.

  அதன்படி தமிழ்நாடு அரசு தமிழக காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியனை நியமித்து தகவல் அனுப்பியது.

  இந்த நிலையில் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில், காவிரி மேலாண்மை குழுவை இப்போது அமைக்கப்போவதில்லை என்று கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் சுப்ரீம் கோர்ட்டில் உறுதி அளித்திருந்த நிலையில் இப்போது மத்திய அரசு அதில் இருந்து பின்வாங்கியது ஏன் என்று புரிந்து கொள்ள முடியவில்லை.

  இந்த சூழ்நிலையில் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் அளித்துள்ள மனுவை வாபஸ் பெற வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டதன்படி 4.10.2016-க்குள் காவிரி மேலாண்மை வாரிய குழுவை அமைக்க வேண்டும். இதன் மூலம் தமிழகத்துக்கு நீதி வழங்க வேண்டும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×