என் மலர்
செய்திகள்

வத்தலக்குண்டு பகுதியில் பெய்த பலத்த மழை
வத்தலக்குண்டு பகுதியில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
வத்தலக்குண்டு:
திண்டுக்கல் அருகே வத்தலக்குண்டு, எம்.வாடிப்பட்டி, பட்டிவீரன்பட்டி பகுதியில் நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து இரவு சுமார் 7 மணியளவில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இந்த மழை ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக இரவு முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதே போன்று தொடர்ந்து இன்னும் சில தினங்களுக்கு மழை பெய்தால் தண்ணீர் தட்டுப்பாடு நீங்கும் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
Next Story