என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அனுமதி பெறாமல் சுவர்களில் எழுதினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை: தேர்தல் அதிகாரி எச்சரிக்கை
Byமாலை மலர்3 Oct 2016 12:31 PM GMT (Updated: 3 Oct 2016 12:31 PM GMT)
உள்ளாட்சி தேர்தலில் அனுமதியின்றி சுவர்களில் எழுதினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி எச்சரித்துள்ளார்.
திருவண்ணாமலை:
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகிற 17, 19 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. 21-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 25-ந் தேதி மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பலகைகள், பொது சுவர்களில் எழுதப்பட்டிருந்த அரசியல் கட்சியினரின் வாசகங்கள் அழிக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் பணிக்காக திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை, செய்யாறு என 2 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. செய்யாறு மண்டலத்தில் வருகிற 17-ந் தேதியும், திருவண்ணாமலை மண்டலத்தில் வருகிற 19-ந் தேதியும் வாக்குப்பதிவு நடக்கிறது.
உள்ளாட்சி தேர்தல் குறித்த கோரிக்கைகள், புகார்கள் மற்றும் ஆலோசனைகள் தெரிவிக்கும் பொருட்டு திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கும் வகையில் 18004253678, 18004253679 என்ற 2 கட்டணமில்லா (டோல்ப்ரீ) தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அனுமதி பெறாமல் சுவர்களில் விளம்பரம் எழுதினால், டிஜிட்டல் பேனர்கள், சுவர்களில் எழுதினால் புகார் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
இதுதொடர்பாக தேர்தல் பிரிவு அதிகாரி கூறியதாவது:-
உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் அல்லது சுயேட்சை வேட்பாளர்கள் சுவர்களில் எழுத, சுவரொட்டி ஒட்ட, டிஜிட்டல் பேனர்கள், துண்டு பிரசுரங்கள் வழங்க என அனைத்துக்கும் முறையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் சுவர்களில் எழுதினால், சுவரொட்டி ஒட்டினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
இதனை கண்காணிக்க ஊராட்சி ஒன்றியம், தாலுகா அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
×