என் மலர்

  செய்திகள்

  திண்டுக்கல் அருகே கடன் கொடுக்க மறுத்த வியாபாரி மீது தாக்குதல்
  X

  திண்டுக்கல் அருகே கடன் கொடுக்க மறுத்த வியாபாரி மீது தாக்குதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திண்டுக்கல் அருகே கடன் கொடுக்க மறுத்த வியாபாரியை வாலிபர் கல்லால் தாக்கினார்.

  சின்னாளப்பட்டி:

  திண்டுக்கல் அருகே உள்ள அ.வெள்ளோடு கிராமத்தை சேர்ந்தவர் யாக்கோபு. இவர் அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த மார்க்யாகப்பன் (வயது28) என்பவர் அவரது கடையில் வாடிக்கையாக பொருட்கள் வாங்கி வந்தார்.

  அந்த வகையில் 9,500 ரூபாய் பாக்கி இருந்தது. அந்த தொகையை யாக்கோபு கேட்க்கும்போதெல்லாம் மார்க்யாகப்பன் சாக்குபோக்கு சொல்லி காலம் கடத்தி வந்துள்ளார்.

  இந்த நிலையில் சம்பவத்தன்று மார்க் யாகப்பன் அவரது கடைக்கு சென்று மீண்டும் கடனுக்கு பொருட்கள் கேட்டுள்ளார்.

  பழைய கடன் தொகையை கொடுத்தால்தான் பொருட்கள் தருவேன் என்று யாக்கோபு கூறினார். இதனால் அவர்களிடையே வாய்த் தகராறு ஏற்பட்டது.

  இதில் ஆத்திரம் அடைந்த மார்க் யாகப்பன், யாக்கோபை அடித்து உதைத்து கீழே தள்ளினார். பின்னர் அருகில் கிடந்த கல்லை தூக்கி அவரது தலையில் போட்டார். பலத்த காயம் அடைந்த யாக்கோபு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  இது குறித்த புகாரின் பேரில் அம்பாத்துரை போலீசார் விசாரணை நடத்தி மார்க்யாகப்பனை கைது செய்தனர்.

  Next Story
  ×