என் மலர்

  செய்திகள்

  பாபநாசம் அருகே வீட்டில் 4 பவுன் நகை திருட்டு
  X

  பாபநாசம் அருகே வீட்டில் 4 பவுன் நகை திருட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாபநாசம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

  பாபநாசம்:

  பாபநாசம் அருகே உள்ள திருப்பாலத்துரை பேஷ்வா அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் சாகுல்அமீது (வயது 45). இவர் குவைத்தில் வேலை பார்த்து வருகிறார்.

  இவரது மகன் முகமது இஷாக் (18). இவர் தனது தாய், தம்பி ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் முகமது இஷாக் தனது குடும்பத்தினருடன் சுவாமிமலையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்து இருந்த 4 பவுன் செயினை திருடி சென்றுவிட்டனர்.

  இதுகுறித்து முகமது இஷாக் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலைசெல்வன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  Next Story
  ×