என் மலர்

  செய்திகள்

  திண்டுக்கல் அருகே 9-ம் வகுப்பு மாணவியை கடத்திய வாலிபர்
  X

  திண்டுக்கல் அருகே 9-ம் வகுப்பு மாணவியை கடத்திய வாலிபர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திண்டுக்கல் அருகே 9-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்ற வாலிபர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
  சின்னாளப்பட்டி:

  திண்டுக்கல் அருகே உள்ள அ.வெள்ளோடு நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் சிவசக்தி (வயது14). அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சின்னாளபட்டி அருகே உள்ள முருகம்பட்டியை சேர்ந்தவர் சின்னையா மகன் முத்தையா (22). டிப்ளமோ முடித்துள்ளார்.

  இவரது பாட்டி வீடு நரசிங்கபுரம் அருகே உள்ள கல்லுபட்டியில் உள்ளது. முத்தையா அங்கு வந்தபோது சிவசக்தியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அடிக்கடி சந்தித்து வந்தனர்.

  இந்நிலையில் பள்ளி காலாண்டு விடுமுறையில் வீட்டில் இருந்த மாணவி சிவசக்தி திடீரென மாயமானார். பெற்றோர்கள் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் காணவில்லை. விசாரித்ததில் சிவசக்தியை முத்தையா கடத்தி சென்றிருப்பது தெரிய வந்தது.

  இது குறித்து சிவசக்தியின் தந்தை முருகன் அம்பாத்துரை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகிறார்கள்.
  Next Story
  ×