என் மலர்

  செய்திகள்

  கோவில்பட்டியில் முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 35 பவுன் நகைகள் கொள்ளை
  X

  கோவில்பட்டியில் முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 35 பவுன் நகைகள் கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவில்பட்டியில் முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 35 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
  கோவில்பட்டி:

  கோவில்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் பார்த்த சாரதி பெருமாள் (வயது60). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி சரஸ்வதி. இவர் வேலாயுதபுரத்தில் உள்ள கூட்டுறவு சங்க அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.

  இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை பார்த்தசாரதி பெருமாளும், அவரது மனைவி சரஸ்வதியும் அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு இரவில் தங்கி விட்டனர்.

  நேற்று நள்ளிரவில் பார்த்தசாரதி பெருமாள் வீட்டை மர்மக்கும்பல் உடைத்து உள்ளே சென்று 3 பீரோக்களில் இருந்த 35 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டது.

  இன்று காலை வீடு திரும்பிய பார்த்தசாரதி பெருமாள், தனது வீடு உடைக்கப்பட்டு நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

  மேலும் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
  Next Story
  ×