என் மலர்

  செய்திகள்

  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய வாலிபர் கைது
  X

  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

  கோவை,:

  கோவை சூலூர் அருகே உள்ள பட்டணத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகள் மல்லிகா (வயது 21). இவர் நாயக்கன்பாளையத்தில் உள்ள உணவு தயாரிப்பு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

  இந்தநிலையில் கடந்த 2½ வருடங்களுக்கு முன்பு அதே கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்த காளம்பாளையத்தை சேர்ந்த கண்ணன் (24) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கண்ணன் மல்லிகாவிடம் நான் உன்னை கண்டிப்பாக திருமணம் செய்து கொள்கிறேன் என உறுதி செய்து இருந்தார். இதை நம்பிய மல்லிகா திருமண கணவுடன் கண்ணனை உயிருக்கு உயிராக காதலித்து வந்தார்.

  இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கண்ணன் மல்லிகாவிடம் பேசுவதையும், பழகுவதை தவிர்த்து வந்தார். இதனால் மனவேதனையடைந்த மல்லிகா கண்ணனை சந்திக்க சென்றார். ஆனால் கண்ணன் சந்திக்க மறுத்து விட்டார்.

  இது குறித்து மல்லிகா பேரூர் அனைத்து மகளிர் போலீசில் தன்னை கண்ணன் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி விட்டதாக புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

  Next Story
  ×