என் மலர்

  செய்திகள்

  தூத்துக்குடியில் பெயிண்டருக்கு கத்திக்குத்து
  X

  தூத்துக்குடியில் பெயிண்டருக்கு கத்திக்குத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தூத்துக்குடியில் பெயிண்டரை கத்தியால் குத்திய 2 பேரை தென்பாக்கம் போலீசார் தேடி வருகிறார்கள்.
  தூத்துக்குடி:

  தூத்துக்குடி கோல்டன்புரத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 29). பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது தம்பி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அப்பகுதியில் உள்ள திருமண மண்டபம் முன்பு நின்று கொண்டிருந்தார்.

  அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் சந்தோஷ்குமாரிடம் தகராறு செய்தார். தகராறு முற்றவே அறுமுகம் தனது நண்பர் அசோக்குமாருடன் சேர்ந்து சந்தோஷ்குமாரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

  இதில் பலத்த காயமடைந்த சந்தோஷ்குமார் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வாக்குப்பதிவு செய்து ஆறுமுகம் உள்பட 2 பேரை தேடி வருகின்றனர்.
  Next Story
  ×